முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு நிறுவனங்களின் நிதியுதவியின் கீழ் ரூ.6.75 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள்: மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      சேலம்
Image Unavailable

 

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 43 சின்ன மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பெறுவதற்கு ஏதுவாக, பல்லவன் கிராமவங்கியின் சார்பில் பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ்ரூ.6.75 இலட்சம் மதிப்பீட்டில் 3 இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் வழங்கினார்.

மோட்டார் வாகனங்கள்

 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவுகளை மேலாண்மை செயலாக்கப்பணிகள் மாநகராட்சி பகுதி முழுவதும் , தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை , பொதுமக்களே தரம் பிரித்து இரு வண்ண கூடைகளில் வழங்குவதற்கு ஏதுவாக, இருவண்ணக் கூடைகளும் , அப்பகுதி முழுவதும் சேகரமாகும் திடக்கழிவுகளை கொண்டு செல்வதற்கு, இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களும் கோட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்குவதோடு மட்டுமல்லாமல், தெருக்களில் குப்பைகள் தேங்காத நிலை உருவாகி வருகிறது. இதனால் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்களில் தேவையற்ற பொருட்களை போடுவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் நோய்கள் உருவாகாத சூழ்நிலையும் ஏற்படுத்தப்படுகிறது.

திடக்கழிவுகள்

 

மேலும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கப்பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதால், திடக்கழிவுகள் முறையாக கையாளப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கோட்டங்களுக்கும் இரண்டடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சுகாதாரமான சூழலை உருவாக்கினால் தான், எதிர் கால சந்ததியினர் சுகாதாரமான சூழலில் வாழ முடியும் என்பதை கருத்தில் கொண்டு, சுகாதார மேம்பாட்டிற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் ஏ.ஆர்.ஏ. ஜெயராஜ் , மாநகர நல அலுவலர் மரு.வி. பிரபாகரன், பல்லவன் கிராம வங்கியின் முதன்மை மேலாளர் சிவக்குமார், பொதுமேலாளர் சந்தோஷ்குமார் , மேலாளர் சண்முகம், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து