முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த வாரம் நானும், ஜான்குமாரும் டெல்லி சென்று மத்திய நிதி மந்திரி, உள்துறை மந்திரி, மனிதவள மேம்பாட்டு மந்திரி, உள்துறை செயலர் ஆகியோரை சந்தித்தோம். அப்போது ஏற்கனவே வலியுறுத்தி வந்த முறையாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டோம்.நிதி மந்திரியும், நிதி செயலரை அழைத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி கூறினார்.

மணல் தட்டுப்பாடு

திட்டமில்லா செலவுக்கு கிடைக்க வேண்டிய நிதி, தானே புயல் நிவாரணம், 6-வது சம்பளக் கமிழன் நிலுவை, 7-வது சம்பள கமிழன் ஆகிய நிதியை வழங்க கேட்டோம். தனி கணக்கு ஆரம்பிப்பதற்கு முன்பாக உள்துறை அமைச்சகம் கட்ட வேண்டிய கடனை மாநில அரசுகளிடம் அளிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம். மத்திய மந்திரி எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து கோப்பை அனுப்பியுள்ளார். ஆனால் நிதித்துறை துரதிஷ்ட வசமாக காலதாமதம் செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு திட்டமிட்டு வழங்க வேண்டிய நிதியை காலதாமதம் செய்து வருகிறது. இது தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசியும் பயனில்லை. ஆந்திர பிரதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை என தெலுங்கு தேச எம்பிக்கள் பாராளுமன்றத்தை முடக்கினர். மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்படுகிறது.பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவு நிதி வழங்கப்படுகிறது. மாநிலத்தற்கு மாநிலம் பாரபட்சம் காட்டப்படுகிறது. யூனியன் பிரதேசமான டில்லியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு நிதியை மத்திய அரசு அளிக்கிறது. ஆனால் புதுச்சேரியில் மாநில அரசே ஒய்வூதியம் தரும் நிலை உள்ளது. 10 ஆண்டுக்கு முன்பு புதுவை அரசு பெற்ற கடனை படிப்படியாக திருப்பி செலுத்தி வருகிறோம். கடந்த மாதம் ரூ.177 கோடியும், இந்த மாதம் 100 கோடியும், அடுத்தமாதம் 177 கோடியும் கடனுக்காக கட்ட உள்ளோம். இதனால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நிதி அளிக்க மத்திய மந்திரி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்க வில்லை. மத்திய நிதி கமிஷனில் புதுவை, டெல்லியை இணைக்க வேண்டும் என நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளோம். அப்படி இணைத்தால் 42 சதவீத நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும். தற்போது 27 சதவீத நிதி மட்டும் தான் கிடைக்கிறது. ஆரோவில் 50-வது ஆண்டு பொன்விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 24-ந் தேதி புதுவை வருகிறார். பிரதமரின் வருகையின் போது துறைமுக திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் கேட்டுள்ளோம். தற்போது துறைமுகம் தூர்வாரப்பட்டு திங்கட்கிழமை  வெள்ளோட்டம் விடப்படுகிறது. பிரதமரின் வருகையின் போது நானும், அமைச்சர்களும் அவரை நேரில் சந்தித்து புதுச்சேரியின் நிதி தொடர்பாக பேச உள்ளோம். பிரதமர் நேரிடையாக தலைவிட்டு புதுச்சேரிக்கு நிதி தர வேண்டும் என்று கோரிக்கையும் வைப்போம். மாநில அரசின் சார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் நிறுவனம் சார்பில் ரூ.800 கோடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சேதராப்பட்டில் மாநில அரசு 50 ஏக்கர் நிலம் வழங்க உள்ளோம். புதுவையில் தொடர்ந்து மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழக அரசிடம் இருந்து பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. வெளிநாட்டில் இருந்து மணல் கொண்டு வர நில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தரமான மணலை இறக்குமதி செய்ய விதிமுறைகளை உருவாக்கும் படி கூறியுள்ளேnhம். அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மலேசியா. தாய்லாந்து, கம்கோடியா ஆகிய நாடுகள் மணலை அளிக்க முன்வந்துள்ளது. நாடாளமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வருவது என்பது  இயலாத காரியம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து