வேலூர் மாவட்டத்தில் கோம்பிங் ஆபரேஷனில் 15 ரவுடிகள் சுற்றி வளைப்பு

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      வேலூர்

வேலூர் டி.எஸ்.பி. ஸ்ரீதரன் தலைமை யில் 50 போலீசார் ரவுடிகளை பிடிக்க இரவு முழு வதும் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர் சென்னை மலையம்பாக்கத்தில் பிரபல ரவுடி பின்னி , கடந்த சில நாட்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ரவுடிகள் புடை சூழ பிறந்த நாள் கொண்டாடினார் .இது குறித்து தகவலறிந்த போலீசார் 75 ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். தொடர்ந்து ரவுடி பின்னி உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வேலூரை சேர்ந்த ரவுடிகள் வசூர் ராஜா, ஜானி உள்ளிட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தப்பிய ரவுடிகளை பிடிக்க வேலூர் , கிருஷ்ணகிரி, கேரளா உட்பட பல்வேறு பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுற்றி வளைப்பு

 

இந்நிலையில் ,மாவட்டம் முழுவதும் அந்தந்த சப்-டிவிஷன் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கோம்பிங் ஆபரேஷன் மூலம் ரவுடிகளை சுற்றி வளைக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.வேலூர் டிஎஸ்பி ஸ்ரீதரன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலீ சார் ஓல்டு டவுன், சார்பனா மேடு, குட்டை மேடு உட்பட பல்வேறு பகுதிகளில் லாட்ஜ்கள், ஓட்டல்கள், சந்தேகத்துக்குரிய வீடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் 15 ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களில் கரகாட்டக்காரி மோகனாம்பாளின் அக்காள் மகன் சரவணன் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி ஜானி கூட்டாளியான கொசப்பேட்டை சின்னா என்கிற சந்திரன் விஜயன் , முரளி. சின்ன அல்லாபுரம் சேட்டு , தோட்டப்பாளையம் வெங்கடேசன் , குமார் , கஸ்பா காதர் பாஷா , ஆகிய 7 பேரும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் சார்பனா மேடு பகுதியில் பதுங்கியிருந்த போது போது போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து மொத்தம் 59,750 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் சுற்றி வளைத்த போது இந்த கும்பலில் இருந்த வசூர் ராஜாவின் கூட்டாளி உதயா என்கிற உதயகுமார் தப்பி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்களிடம் சென்னை ரவுடி பின்னு பிறந்த நாள் விழாவில் பங்கேற்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் மாவட்டம் முழுவதும் ரவுடி கும்பல் 30 க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து