முக்கிய செய்திகள்

மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி வெற்றி கலெக்டர் என்.வெங்கடேஷ் வாழ்த்து

tuty collector

மதுரை மாநகரில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 26.1.2018 முதல் 28.1.2018 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம், சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி செல்வி ப.முத்துமினா கலந்து கொண்டு, குண்டு எரிதலில் முதல் பரிசும், ஈட்டி எரிதலில் இரண்டாம் பரிசும்; பெற்றார். மாவட்ட நிர்வாகம் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் நேரில் சந்தித்து பாராட்டு நற்சான்றிதழ்களும், கேடயங்களும் கலெக்டர் அலுவலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:

கலெக்டர் பாராட்டு

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள சாதாரண மக்கள் மேற்கொள்ளும் பணிகளைப் போல், மாற்றுத்திறனாளிகளும், சுயமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மோட்டார் பொருத்திய இரு சக்கர வாகனம், ஊக்கத்தொகை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி, காதொளி கருவி, ஊன்றுகோல், சக்கர நாற்கால என பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், அனைத்து திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டம், சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவி செல்வி ப.முத்துமினா மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில்  கலந்து கொண்டு குண்டு எரிதல் மற்றும் ஈட்டி எரிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதைப்போல் மாற்றுத்திறனாளிகள் தாமாக முன்வந்து போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மார்ச் மாதம் சாண்டிகார் மாநிலத்தில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி செல்வி ப.முத்துமினா வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, சார் ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து