முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் மலைமேல் கைலாசநாதர் திருக்கோவிலில் மஹாசிவராத்தி விழா

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

தேனி-  பெரியகுளம் அருகே மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று பிரதோஷம் என்பதால் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர்  உற்சவமூர்த்தி கோவிலை மூன்றுமுறை வலம் வந்தபின் கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கைலாசநாதருக்கு பால், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் நான்கு கால பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதிகாலையில் மஹா தீபாராதனை நடைபெற்றது.  இச்சிறப்பு பூஜையில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை முன்னிட்டு தாமரைக்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமதண்டபாணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து