முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 5 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அவர் பெயரால் ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்காக அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் தென்னை ஓலைகள், பழங்கள், வாழை மரங்களை கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. தலைமை அலுவலகம் முழுவதும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சட்டசபையில் திறக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்தை போன்றே அ.தி.மு.க.தலைமை அலுவலக அரங்கிற்கு வெளியேயும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட உருவ படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்.,

சரியான நேரத்தில், சரியான தருணத்தில் இந்த கூட்டத்தை அமைச்சர் உதயகுமார் கூட்டி உள்ளார். முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நேரத்திலும் சரி, அவரது மறைவுக்கு பிறகும் அமைச்சர் உதயகுமார் நடத்தும் கூட்டங்கள் என்றுமே தனி முத்திரை பதித்ததாக அமைந்திருக்கும். அ.தி.மு.க. மீதும், ஜெயலலிதா மீதும், ஆட்சி மீதும் விசுவாசம் கொண்டவர் உதயகுமார். தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாளை கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதே போன்று ஜெயலலிதா பிறந்த நாளை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை தமிழகம் முழுவதும் கொண்டாட முடிவு செய்துள்ளோம். எனது தலைமையில் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் மேலும் 5 ஆண்டுக்கு ஜெயலலிதாவின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து