எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மயான கொள்ளை திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையட்டி 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மகசிவராத்திரியையட்டி நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் சிவவழிபாடுகள் நடந்தன.
மயான கொள்ளை
நேற்று அமாவாசை என்பதால் மயான கொள்ளை திருவிழா தமிழகத்தின் வடமாவட்டங்கள் அண்டை மாவட்டங்களான ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதேபோல மாசிமாத அமாவாசையான நேற்று திருவண்ணாமலையில் மயான கொள்ளை நடந்தது. இதை முன்னிட்டு தண்டராம்பட்டு ரோடு புதுவாணியங்குளத்தெரு சிவன்படத்தெரு ஆகிய தெருக்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மேளதாளம் முழங்க பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் பக்தர்கள் சிவன், பார்வதி, காளிவேடமிட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேர்த்திக்கடன் பொருட்டு பக்தர்கள் தங்கள் முதுகில் குத்தியிருந்த எலுமிச்சை பழம் கீழேவிழுந்தபோது பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு எடுத்தனர். மாலை 5 மணியளவில் ஈசான்யத்தில் மயானசூறை நடந்தது. இவ்விழாவில் ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |