முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எர்ரஅள்ளி கிராமத்தில் மயக்க ஊசி போட்டு மயங்கிய காட்டெருமைக்கு தீவிர சிகிச்சை

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள எர்ரஅள்ளி கிராமத்தில் கடந்த 12ம் தேதி காட்டு எருமை வந்தது. அங்குள்ள மாந்தோப்பில் இருந்த காட்டுஎருமையை கண்ட, கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

 

காட்டு எருமை

இதனை தொடர்ந்து வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு எருமை வனப்பகுதிக்கு நோக்கி சென்றுவிட்டதாக கருதி மக்கள் நிம்மதியடைந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் மீண்டும் காட்டு எருமை, எர்ரஅள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஒரு ஏரியில் தஞ்சம் அடைந்தது. வனத்துறையினர் காட்டு எருமையை தொடர்ந்து கண்காணித்து வந்தநிலையில், நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள சென்றாய சுவாமி கோயில் எதிரே உள்ள மாந்தோப்பில் காட்டுஎருமை தஞ்சமடைந்தது. இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி காட்டு எருமையை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். நேற்று காலை 11.30 மணியளவில் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ், துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை இணைத்து, காட்டு எருமைக்கு செலுத்தினர்.

 

 

மயக்கஊசி

ஊசியில் இருந்த மருந்து எருமையின் உடலுக்குள் செல்லாததால், நகராமல் ஒரே இடத்தில் இருந்த காட்டு எருமைக்கு வனவிலங்களுக்கான பயன்படுத்த கூட நீளமான மூங்கில் கம்பில், ஊசியை கட்டி செலுத்தினர். இதையடுத்து 45 நிமிடங்களில் காட்டு எருமை மயங்கி விழுந்தது. பின்னர், ஜேசிபி வாகனம் மூலம் மயங்கி கிடந்த காட்டுஎருமையை வனத்துறையினர் தூக்கி சென்று, வனத்துறை வாகனத்தில் ஏற்றி கொண்டு, பேரண்டப்பள்ளி வனத்துறை கால்நடை மருத்தகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர் கூறும்போது, மீட்கப்பட்ட காட்டு எருமை சாலையை கடக்கும் போது, வாகனத்தில் அடிப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. மாந்தோப்பில் சுற்றி திரிந்த போதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டிய போதும், நகர முடியாமல் இருந்துள்ளது. காட்டு எருமைக்கு வலி நிவாரணி மருந்து அளிக்கப்பட்டதால், சுற்றி வந்துள்ளது. கடுமையான காயங்கள் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து