கோவில்பட்டிக்கு வரும் 25ந்தேதி முதல்வர் வருகை 40 ஆண்டு கனவு நிறைவேற உள்ளதாக அமைச்சர் கடம்பூர்ராஜீ பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
minister kadambur raju press meet

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர்ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் கோவில்பட்டி மக்களின் 40 ஆண்டுகால கனவு திட்டமான சிவலப்பேரியில் இருந்து தனிக்குடிநீர் திட்டமாக 2வது குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டப்பணியை தொடங்கிவைத்தார்.

கடம்பூர் ராஜூ பேட்டி

தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளதால் வரும் 25ந்தேதி கோவில்பட்டியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற திட்டத்தினை மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்வது மட்டுமின்றி, புதிய திட்டபணிகளுக்கும் அடிக்கல்நாட்டுகின்றார் என்றார்.மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் தமிழகம் பங்கரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக தெரிவித்த கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு திமுக ஆட்சிகாலத்தில் தான் குண்டுவெடிப்பு சம்பங்கள் நிகழ்ந்ததாகவம், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது திமுக ஆட்சி தான், கோவையில் குண்டு வெடித்த போது திமுக ஆட்சி தான், அதனை தான் மறதியாக அவர் சொல்லி இருப்பார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், அவரின் வழியில் நடைபெறும் இந்த ஆட்சியில் தமிழகம் அமைதிபூங்காவாக திகழ்ந்து வருவதாக தெரிவித்தார்.சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கபட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு தகுதியான நபருக்கு தான் பதில் சொல்லமுடியும், 24மணிநேரமும் தன்னிலை அறியதவருக்கு பதில் சொல்லவேண்டியதில்லை என்றார்.தொடர்ந்து பேசுகையில் பத்திரிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகளை இந்த அரசு செய்து வருவதாகவும், டெல்லியில் தமிழக பத்திரிக்கையாளர்கள் வைத்த கோரிக்கையை முதல்வரிடம் எடுத்து கூறி பழைய தமிழ்நாடுஇல்லத்தில் பத்தரிக்கையாளருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பத்தரிக்கையாளர்கள் நலவாரியம், மருத்துவப்படி உயர்வு என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். வரும் நிதிநிலை அறிக்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வரும் என்றார். பேட்டியின் போது கலெக்டர் வெங்கடேஷ் உடனிருந்தார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து