கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு சட்டம் மற்றும் விதிகள் குறித்து பயிற்சி முகாம்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      நீலகிரி
Champ

கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு சட்டம் மற்றும் விதிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஊட்டியில் நடைபெற்றது.

மையக்கருத்து

நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எம்.மோகன் தலைமை தாங்கி பேசுகையில், இந்த பயிற்சி வகுப்பின் மையக்கருத்தாக கூட்டுறவுத்துறை பணியாளர்கள் அனைவருக்கும் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்றார்.
இப்பயிற்சி முகாமில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆ.பழனிச்சாமி, துணைப்பதிவாளர்கள் எஸ்.பார்த்திபன்(மத்திய கூட்டுறவு வங்கி). சி.ராதாகிருஷ்ணன்(சரகம்), ஜெ.நீலா(நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லேஸ்(குன்னூர் கூட்டுறவு நகர வங்கி) மற்றும் கூட்டுறவுத்துறையின் அனைத்து பணியாளர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து