கும்மிடிப்பூண்டியில் பொது வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      சென்னை
G pundi

புது கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை பொது வியாபாரிகள் சங்க ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது வியாபாரிகள் சங்க தலைவர் வி ஆர்.அரசு தலைமையில் நடைபெற்றது

சங்க ஆண்டு விழா

தொடர்ந்து செயலாளர் காமராஜ் துணை செயலாளர் முத்துலிங்கம் துணைத் தலைவர் கிளமன்ட் முன்னிலை வகித்தனர் மற்றும் மதிவாணன் வரவேற்புரை வழங்கினார் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நிறுவனர் தனபாலன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் காவல் துறை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எம்.தில்லை நடராஜன் கலந்து கொண்டனர்

தொடர்ந்து விழாவில் பேசிய கண்காணிப்பாளர் வியாபாரிகள் சேவை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் அப்போது தான் முன்னேற முடியும் அதே நேரத்தில் இந்த ஆண்டு விழாவானது விபாரிகளின் உழைக்கும் நாளாக கொண்டாடப்பட வேண்டும் உழைக்கும் மக்கள் வியாபாரிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என வாழ்த்தி பேசி சிறப்புரையாற்றினார் தொடர்ந்து விழா முடிவில் துணைத் தலைவர் பி.பிரேம் ஆனந்த் நன்றியுரையாற்றினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து