முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018-19 ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை விருதுநகர் கலெக்டர் சிவஞானம், வெளியிட்டார்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் - தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி(நபார்டு வங்கி) விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம்  சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.7430.34 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை  மாவட்ட ஆட்சித் தலைவர் .அ.சிவஞானம்,  வெளியிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறுகையில்:
 விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குவதாகவும், இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும் என்றும், வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும் என்றும்; கூறினார்கள். மேலும் வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் வளம் சார்ந்த் கடன் திட்ட அறிக்;கையின் உதவியுடன் விருதுநகர் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 இக்கடன் திட்ட அறிக்கை பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும்; அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய மாற்றங்களை கொண்டு வருவதற்கான  ஏற்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.
இந்த திட்ட அறிக்கையை ஓர் முன் மாதிரியாக வைத்து தங்களது  கிளைக்கான கடன் திட்ட குறியீட்டை தயார் செய்து அதை குறிப்பிட்ட படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மாவட்ட முன்னோடி வங்கி(ஐ.ஓ.பி) யில்  சமர்ப்பிக்குமாறு  மாவட்ட வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்கள்.
 இந்த திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை  அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும், இந்த அறிக்கை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் உள்ள ஒதுக்கீடுகளை அடிப்படையாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் உதவி பொது மேலாளர் (பாரதிய ரிசர்வ் வங்கி) திரு.சுரேஷ்குமார்வேணு   கூறினார்கள். 
இக்கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளர்(இந்தியன் ஓவர்சீஸ் வங்கி)  உமா மஹேஸ்வரி, மாவட்ட முதன்மை வங்கி மேலாளர்  .கலைச்செல்வன், வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள்; பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து