திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட செயலாளர் தருமலிங்கம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
photo05

 

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணா¬லை துரிஞ்சாபுரம், கலசபாக்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெற்கு மாவட்ட தினகரன் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் கலந்து கொண்டு எம்ஜிஆர் திருவுருவ சிலைகளுக்கும், ஜெயலலிதா திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

 

திருவண்ணாமலை அண்ணாநகரில் மாவட்ட மகளிரணி ராஜலட்சுமி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உதவும் கரங்கள் இல்லத்தில் ஏ.கே.கதிரவன், திருவண்ணாமலை ரோஸ் மருத்துவமனையில் மாவட்ட மாணவரணி விஜயகுமார், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அண்ணா போக்குவரத்து கழக எம்.சத்தியமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு, அத்தியந்தல் ஆகிய கிராமங்களில் ஒன்றிய செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன், கலசபாக்கத்தில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊசாம்பாடியில் ஒன்றிய செயலாளர் எம்.சிவக்குமார், சேரியந்தல் கிராமத்தில் அண்ணா போக்குவரத்து கழக மண்டல செயலாளர் கே.ஆனந்தன், புதுப்பாளையம் ஒன்றியத்தில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் குரு ஏழுமலை, ஒன்றிய செயலாளர் மாதவன், பேரூராட்சி செயலாளர் அயோத்தி, செங்கத்தில் ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பேரூராட்சி செயலாளர் சிவசங்கர், தண்டராம்பட்டில் ஒன்றிய செயலாளர் விஜயராஜ், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், வேட்டவலம் பேரூராட்சியில் செந்தில்குமரன், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலை, அன்னதானம், ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பால், சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை வழங்கியதோடு அவர் கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அப்புனு (எ) சண்முக சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் குப்பன், கல்பனா சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் அன்புமணி, , பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரகுமார், , மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜாங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஐ.செல்பாபு, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சரவணன், வழக்கறிஞர் பிரிவு உதயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் விமல்குமார், வழக்கறிஞர் எம்.ஆர்.பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி எச்.ஆர்.அர்பத், மீனவரணி எஸ்.ரவி, மாவட்ட மகளிரணி பொருளாளர் பானு, மாவட்ட விவசாயி அணி ஜெயபால், ஜெயக்குமார், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட பொருளாளர் அருணை கோவிந்தன், மாவட்ட பாசறை இணை செயலாளர் ஞானமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆர்.பிரவீன், ஏ.சிலம்பரசன், மாணவரணி திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் செய்திருந்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து