முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      தேனி
Image Unavailable

  தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர்  பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர்  தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி சையதுகான், நகர செயலாளர் என்.வி.ராதா, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து வரவேற்றார்.  அன்வர்ராஜா எம்.பி, தலைமை கழக பேச்சாளர் நேதாஜிபாபு, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வழக்கறிஞர் சந்திரசேகரன் பேசும்போது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1984ம் ஆண்டு பாராளுமன்றத்தில்; அண்ணா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து தனது கன்னி பேச்சால் அனைவரின் பாராட்டை பெற்றார். 1989ம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி தலைவரானார். 1991, 2001 மற்றும் 2011 முதல் தன் வாழ்நாள் முழுவதும் முதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார் என்றார்.
ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசும்போது மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை முழங்கிய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதனடிப்படையில் மக்களின் வாழ்வாதாரம் சிறக்க ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். மேலும் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்து பெண்சிசு கொலையை தடுத்து நிறுத்தினார். இத்திட்டத்தில் சேர்ந்த முதல் குழந்தை தற்போது பொறியாளர் படிப்பு படித்து நல்ல பணியில் உள்ளார். முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த ஆணை பெற்று தந்தார். மேலும் 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டார். காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வைத்தார். காங்கிரஸ் அமைத்த மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த  தேவையான துறைகளை கேட்காமல் வருமானம் கொழிக்கும் துறைகளை கேட்டனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கபட்டபோது சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று கூறியவர்கள் தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கும்போதே சுயநினைவு இன்றியே இருந்தார் என்று கூறியுள்ளனர். இந்த பொய்யை சொல்ல சொன்னவர்கள் யார்? எனக்கு துரோகம் செய்தவர்கள் என்று சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்றினார்  புரட்சித்தலைவி அம்மா. அதன் பின் தனது குடும்பத்தினர் செய்த துரோகம் எனக்கு தெரியாது என்றும், பதவிக்கு ஆசைப்படமாட்டேன் என்று எழுதி கொடுத்து திரும்பியவர் சசிகலா.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது 70 நாட்களாக மருத்துவமனை முன்பாக இருந்த தொண்டர்கள் மற்றும் 7 கோடி தமிழக மக்களுக்கு புரட்சித்தலைவி அம்மா சிகிச்சைபெற்ற ஒரு போட்டோவை கூட  காட்டாதவர்கள் ஒரு தொகுதியில் ஜெயிக்க சிகிச்சை வீடியோவை வெளியிட்டு தொண்டர்களின் எண்ணங்களை குழிதோண்டி புதைத்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய நமது இயக்கத்தை 40 நாட்களில் அபகரிக்க நினைத்த இவர்களால் நமது இயக்கத்தின் ஒரு செங்கலை கூட உருவ முடியாது என்றும், நமது இயக்கத்தை ஒரு வலிமையான இயக்கமாக கொண்டு செல்வோம் என்றார். ஏர்செல்ரபீக் அகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் தேனி நகர செயலாளர் முருகேசன், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் நாராயணன், இயக்குநர்கள் அன்பு, பிரேமாராஜேந்திரன், சேகர், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷம், கோவில் சிவக்குமார், வி.டி.எஸ்.ராஜவேல், வார்டு செயலாளர்கள் காஜாமுயுனுதீன், தவமணி, சிவக்குமார், முத்துப்பாண்டி மற்றும் மகளிர் அணியினர், ஏராளமான தொண்டாகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து