முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வளர்ச்சி 7.6% -ஆக இருக்கும்: மூடிஸ்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ஜி.எஸ்.டி மற்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களின் தாக்கத்தில் இருந்து பொருளாதார மீட்புக்கான அறிகுறிகளுக்கு மத்தியில், 2019-ம் ஆண்டில் 7.5 சதவிகிதம் மற்றும் 2018-ம் ஆண்டு காலகட்டத்தில் 7.6 சதவிகித வளர்ச்சியை இந்தியா பெறும் என மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை மதிப்பிட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவைவரி வெளியிடுவதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எதிர்மறையான தாக்கத்தின் காரணமாக மென்மையான வளர்ச்சி பாதையில் இருந்த இந்திய பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் தொடங்கியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டமானது, கிராமப்புற பொருளாதாரத்தை சீரமைக்கக்கூடிய சில நடவடிக்கைகளை உள்ளடக்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கிராமபுறங்கள் இன்னும் அதிலிருந்து இன்னும் மீளவில்லை. வங்கியின் மறு நிதியளிப்புத் திட்டத்தினால் கடன் வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். என மூடிஸ் கூறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து