திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      தூத்துக்குடி
thiruchenthur murugan kovil therottam (2)

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.

தேரோட்டம்

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடும், சிறந்த குருபரிகார ஸ்தலமும், கடற்கரையில் அமைந்துள்ள அழகிய திருக்கோவிலுமான திருச்செந்தூரில் மாசி திருவிழா கடந்த பிப் 20-ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழா 7ம் திருநாளில் சுவாமி சண்முகபெருமான் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ம் திருநாளில் அதிகாலை வெள்ளை சாத்தி கோலத்திலும், மாலை பச்சை சாத்தி கோலத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து திருக்கோவில் வந்து சேர்ந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.  அதிகாலை 5.45 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 6.20 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது, தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்கள் அரோகரா கோஷம் ஒலிக்க வலம் வந்து காலை 8.25 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அதன்பின் காலை 8.35 மணிக்கு தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து காலை 9.50 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, திருக்கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், ஆர்டிஓ தங்கவேலு, திருக்கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, உதவி செயற்பொறியாளர் சந்தாணகிருஷ்ணன், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், மணியம் ரமேஷ், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மனோரஞ்சிதம், தொழிலதிபர்கள் கதிரேச ஆதித்தன், ரமணி, அர்ச்சனா கிட்டப்பா, இந்து முன்னணி மாநில தலைவர் அரசுராஜா, மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொது செயலாளர் சக்திவேலன், பாஜ மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், அதிமுக மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, தமிழ்நாடு மாநில பனைவெல்ல கூட்டுறவு இணைய தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் சுரேஷ்பாபு, பூந்தோட்டம் மனோகரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி, தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை ஆலோசகர் கிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோவில் தக்கார் கண்ணன்ஆதித்தன், இணைஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து