எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜையையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிலையில், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜையையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காலை முதலே தே.மு.தி.க. தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


