முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன எல்லையில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு: ராணுவ இணை அமைச்சர் கருத்து

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்திய ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே கூறினார்.

வருடாந்திர ராணுவ கருத்தரங்கு டெல்லியில்  நடைபெற்றது. இதில் பங்கேற்று சுபாஷ் பாம்ரே பேசும்போது,
இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி, அத்துமீறல் மற்றும் மோதல்போக்கு காரணமாக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

அவர் மேலும் பேசும்போது, பாகிஸ்தானில் மத அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) தீவிரவாத அமைப்பின் சிந்தாந்தத்தை கிழக்கு நோக்கி பரப்பும் ஊடகமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்றார்.

இதனிடையே காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் தீவிர வாதி ஒருவர் கொல்லப்பட்டார்.  பண்டிப்போரா மாவட்டம், ஹஜின் பகுதியில் உள்ள ஷக்குர்தின் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கிராமத்தை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் காலையில் சுற்றி வளைத்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து