முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்திற்கு அம்மா இருச்சக்கர வாகனம் வழங்க முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி வருகை விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சேலம் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத்தை 12.03.2018 அன்று சேலம், சோனா பொறியியல் கல்லூரியில் வழங்கவுள்ளதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகளை நேற்று 02.03.2018 கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

முதல்வர் வருகை

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் பிரதமர் சென்னையில் அம்மா இருச்சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் வரும் 12ம் தேதி சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி சுமார் 500க்கும் மேற்பட்ட, பணிக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா இருச்சக்கர வாகனத்தினை வழங்க உள்ளார்.

 

ஆய்வு கூட்டம்

மேலும், இவ்விழால் சேலம் மாவட்டத்தில் அரசு துறைகளின் மூலம் பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 2000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கவுள்ளார்கள். கலெக்டர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். இவ்விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் நேற்று (02.03.2018) ஆய்வு மேற்கொள்ளப்பபட்டது.

 

இந்த ஆய்வில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஸ், மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து