தமிழகத்தில் மூன்றெழுத்தில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      தூத்துக்குடி
minister kadambur raju speech in jeyalalaitha birthday public meetting

கமல், ரஜினியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மூன்றெழுத்தில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட அதிமுக மாவட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு விவிடி சிக்னல் அருகில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு 5000 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் அவர் பேசுகையில்கடந்த ஓராண்டு சாதனை என்பது நூறாண்டு சாதனைக்கு சமமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாபெரும் இரு தலைவர்கள் இல்லாத நிலையில் அதிமுகவை முடித்துவிடலாம் என்று எண்ணி நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளன்கள் போல இன்று புற்றீரிசல் போல நிறைய கட்சிகள் வருகின்றன. இதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதிமுகவிற்கு எதிராக எந்த இயக்கமும் தலை எடுக்கமுடியாது.திமுகவில் செயல்படுவதற்கு ஒரு தலைவர், செயல்படாதற்கு ஒரு தலைவர் உள்ளனர். ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது. நேற்று கட்சி ஆரம்பித்து நாளைய முதலமைச்சர் என்று ஒரு சில நடிகர்கள் கூறி வருவதை பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை.  ஓராண்டு ஆட்சியை ஒரு பிசிறு கூட இல்லாமல் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி திறமையாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில் “கமல், ரஜினியை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அவர்களுக்கு கொள்கை கோட்பாடுகள் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தது கிடையாது, என்றும் கடந்த கால வரலாற்றை பார்த்தால் தமிழக வரலாற்றில் எம்ஜிஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. மக்களுக்கு சேவைக்கும் இவர்களுக்கும் வெகு தூரம் ஆகவே இவாகளை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.நிதழ்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி ,கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை ,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் மாநில பனை வெல்ல இனைய தலைவர் திரு டி. தாமோதரன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஏ . செல்லத்துரை ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர்  குருத்தாய் என்ற விண்ணரசி, மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், ராஜசேகரன், மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை  செயலாளர் துறையூர்  கணேசன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி. சின்னப்பன் .நீலமேகவர்ணம் .ஆவின் துணை தலைவர் செங்கான் ,கருங்குளம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கே பிச்சையா . கழக பொது குழு உறுப்பினர்கள்..கே. ஆயிஷா கல்லாஷி,எஸ்.கே.மாரியப்பன்,ஆர்.பி.கடற்கரைவேல்,எம். அய்யாத்துரை பாண்டியன்,மாவட்ட கழக துணை செயலாளர்கள்..பி.மோகன் Ex. MLA ,டி.தங்க மாரியம்மாள்,மாவட்ட கழக பொருளாளர் பி.ஜெபமாலை, ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடிபி.சண்முகவேல், சாத்தான்குளம் பி. சௌந்தர பாண்டியன், திருச்செந்தூர் எம். ராமச்சந்திரன், ஓட்டப்பிடாரம் எஸ் . தர்மராஜ், புதூர் கே.ஞானகுருசாமி ,கோவில்பட்டி எஸ் அய்யாத்துரை பாண்டியன் ,நகர செயலாளர்கள் கோவில்பட்டி விஜயபாண்டியன், காயல்பட்டினம் செய்யது இப்ராஹீம் ,முன்னாள் துணை மேயர்  சேவியர்,நகர மாணவரணி செயலாளர் சாலமோன் ஜெயசீலன், பேரூராட்சி கழக செயலாளர்கள் சாத்தான்குளம் செல்லத்துரை, திருச்செந்தூர் மகேந்திரன், ஆறுமுகநேரி அரசகுரு, ஸ்ரீ வைகுண்டம் சிவலிங்கம்,ஆழ்வை செந்தில் ராஜ் குமார்,கானம் மாதவசிங்,ஏரல் அத்திப்பழம்,பெருங்குளம் செல்லத்துரை,கயத்தார் கப்பல் ராமசாமி,எட்டையபுரம்  மார்,விளாத்திகுளம்நெப்போலியன்,அனைத்துமாவட்டதொகுதிஒன்றியநகரஊராட்சிகிளை கழக நிர்வாகிகள்அணி நிர்வாகிகள்,தொழிற்சங்க நிர்வாகிகள்உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் அம்மா பேரவை நிர்வாகிகள்கழக உடன்பிறப்புகள் பொது மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்..முன்னாள் அவை தலைவர் வட்ட கழக செயலாளர் எம் பெருமாள் நன்றியுரையாற்றினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து