முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னசேக்காடு தொடக்கப்பள்ளி விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      சென்னை
Image Unavailable

சென்னை மாநகராட்சி 29வது வட்டம் சின்னசேக்காடு பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டுவிழா தலைமைஆசிரியை கே.எஸ்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. உதவி ஆசிரியை சி.சேர்மாசுந்தரி வரவேற்றார்.

விளையாட்டு போட்டி

 பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் எம்.அருணாச்சலம், துணைத்தலைவர் ஏ.கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டியை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.சிவக்குமார் தொடங்கி வைத்தார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டியை சின்னசேக்காடு பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.கரிகாலசோழன் தொடங்கி வைத்தார். விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புழல் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜோ.மேரிஜோஸ்வின் பரிசு வழங்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அசோக்லைலண்ட் வி.சுந்தர், போலிஸ்இன்ஸ்பெக்டர் கே.காளிராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் ச.தர்மராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெ.லிவிங்ஸ்டன் ஆகியோரும் பி.டி..,என்.அன்பழகன், எஸ்.அகிலன், முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், ஆசிரியர்கள் டி.பானுமதி, சி.கலைச்செல்வி, கஸ்தூரிஜோதி, மரியலல்லி, உமா, ராஜேஷ், ராஜசுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ஜி.டில்லிபாய் ஆண்டறிக்கை வசித்தார். முடிவில் ஆசிரியர் ஜி.டில்லிபாய் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து