காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டில்லியில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      தேனி
kavery water 6 3 18

கம்பம்,- உச்சநீதி மன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் இன்று கோரிக்கை பதாகைகளை ஏந்தி பாராளுமன்ற வளாகத்தில் அண்ணா தி.மு.க. எம்.பி.க்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்கு கொண்டு சென்றனர்.டில்லியில் பாரளுமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது.இந்த கூட்டத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேச தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முன் வந்துள்ளதால் தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற வாய்ப்புள்ளது.இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்த வேண்டி தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் தலைமையில்  அண்ணா தி.மு.க.எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோரிக்கை நிறைவேற வலியுறுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து