கார்களை தாக்கியும், தகாத வார்த்தைகளை கூறி அராஜகத்தில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள்

புதன்கிழமை, 7 மார்ச் 2018      தேனி
peryakulam 7 3 18

தேனி,- பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் மெயின் ரோட்டில் வந்த கார்களை தாக்கியும், தகாத வார்த்தைகளை கூறியும் டி.டி.வி. தினகரன் தினகரன் ஆதரவாளர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
70-வது பிறந்தநாள்...
நமது கழக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு   பாசறையின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தலைமையில்  வரும் 11-ம் தேதி பெரியகுளம் அருகே மிக பிரமாண்டமான அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 7070 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
சாலை மறியலில்...
இவ்விழாவிற்காக கழக நிர்வாகிகள் பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் பிளக்ஸ் பேனர் வைக்க முறையான அனுமதி பெற்றுள்ள இடங்களில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அனுமதியின்றி பிளக்ஸ் பேனரை வைத்துள்ளனர். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற கோரி கழக  நகர செயலாளர் என்.வி.ராதா, நகர துணை செயலாளர் அப்துல்சமது, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காவல் துறையினரிடம் முறையிட்டும் பிளக்ஸ் பேனர்களை அகற்றாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரவீந்திரநாத் ஆறுதல்
சாலை மறியலில் ஈடுபட்ட கழக நிர்வாகிகளை காவல் துறையினர் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் துணை செயலாளர் நாராயணனுக்கு காயம் ஏற்பட்டு அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வரும் இவரை தேனி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை முன்னாள் செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அ.தி.மு.க.வினர் புகார்...
இந்நிலையில் பெரியகுளம் பகுதிக்கு டி.டி.வி தினகரனுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் மூன்றாந்தல் பகுதியில் மெயின் ரோட்டில் வந்த கார்களை மறித்து, தாக்கியும், தகாத வார்த்தைகளை கூறி  அராஜகத்தில் ஈடுபட்டனர். இவர்களின் அராஜகத்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷமிட்டனர்.  இதனால் இப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட டிடிவி ஆதரவாளர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து