இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் படகுகள் மீது பாட்டில்,கற்களால் வீசி விரட்டியடிப்பு:

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      ராமநாதபுரம்
rmsboad  8 3 18

 ராமேசுவரம்,மார்ச்,8: ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் ரோம்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு பாட்டில்,கற்கலால் வீசி மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் நேற்று விரட்டியடித்தனர்.
 ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் கிழமை காலையில் 400க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் அன்று இரவு கச்சத்தீவு  பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், திடீரென  படகுகளை நோக்கி கண்ணாடி பாட்டில்,கரிங்கற்கள் போன்றவைகளால் எரிந்து மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் திடீரென தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து  மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த மீன்பிடி வலைகளை வெட்டிவிட்டு அப்பகுதியிலிருந்து படகை செலுத்திக்கொண்டு ராமேசுவரம் பகுதியை நோக்கி வந்தனர்.இதணையடுத்து இலங்கை கடற்படையினர் இரவு முழுவதும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு அத்து மீறி இந்திய கடலோரப்பகுதியிலும் வந்து மீனவர்களை  மீன்பிடிக்க விடாமல் அச்சத்தை ஏற்படுத்தி வந்தனர்.இதனால் உயிர்க்கு பயந்த மீனவர்கள் அப்பகுதியிலிருந்து படகை செலுத்திக்கொண்டு ராமேசுவரம் பகுதியை நோக்கி நள்ளிரவே சிலர் மீனவர்கள் வந்துள்ளனர்.இந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலால் மீனவர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும்  வலைகள் உள்ளிட்ட மீன்பிடிச் சாதனங்களை மீட்க முடியாததால், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பல லட்ச ரூபாய் இழப்பும்,மீன்கள் பிடிக்கமுடியாத நிலை ஏற்பட்டதால் வருவாய் பாதிக்கப்பட்டதாக  அதி காலையில் கரை திரும்பிய மீனவர்கள்  நேற்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து