முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் இளம்பெண்கள் பாசறையினருக்கு உள்ளாட்சி தேர்தலில் நிற்க அதிகளவு வாய்ப்புகளை தரவேண்டும் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேச்சு

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் நேற்று முன்தினம் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் 7070 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தலைமையேற்ற பாசறையின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசும்போது மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின்; கூற்றுக்கேற்ப அம்மாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 7070 நபர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. நமது கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக கடந்த 2008ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பாசறையினர் அம்மாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரத்த தானம் வழங்குவது, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என செயல்பட்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கனவை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கழக நிர்வாகிகளோடு சேர்ந்து கடும் உழைப்பை கொடுத்தனர் அதன் விளைவாக அப்போதைய மைனாரிட்டி திமுக ஆட்சியை அகற்றி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதல்வராக பதவியேற்றார். 100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்ற விவேகானந்தரின் கூறினார். தற்போது நமது கழக பாசறையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், இளைஞிகளும்  இருக்கிறார்கள். இவர்கள் விசுவாசமிக்கவர்களாக, வலிமையானவர்களாக, உண்மையான தொண்டர்களாக இருப்பதால் நமது கழகம் இன்னும் வலுப்பெற்றுள்ளது.  பாசறை உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. பாசறையினர் கழக நிர்வாகிகளோடு சேர்ந்து அரசியல் பாடம் கற்று தேர்ந்து உள்ளனர். எனவே பாசறையினருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகளை தரவேண்டும் என்றார். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்ததால் துரத்தியடிக்கப்பட்ட  தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இப்பொழுது அம்மா இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி குழப்பத்தை உருவாக்கப்பார்கிறார். ஆர்.கே நகர் தேர்தலில் குழப்பமான சூழலை பயன்படுத்தி டோக்கன் சிஸ்டத்தின் மூலம் பெற்ற வெற்றி நிரந்தரமானது இல்லை. மேலும் இவர் நமது கழகத்திற்காக ஒரு ஓட்டு கூட பெற்று தந்தது இல்லை. அனைத்து ஓட்டுகளும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த நல்ல பல திட்டங்களுக்காகவும், இரட்டை இலைக்காகவும் விழுந்த ஓட்டுக்களாகும். அம்மாவின் திட்டங்களை பிளக்ஸ் பேனர்களாக வைக்க வேண்டுமென்றால் குமுளி வரை வைக்க வேண்டும் என்றார். முன்னதாக போடி விலக்கிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத்குமார் தலைமையில் இளைஞர் இளம்பெண்கள் பாசறையினர் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாசறையினர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து