போடி குரங்கணி பகுதி மலைகிராம மக்களுக்கு ஓ.பி.ரவீந்திரநாத்குமார் நன்றி தெரிவித்தார்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தேனி
OBVVENDRAN NATHKKAR 13 3 18

போடி. - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குரங்கணி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 11 பேர் தீயில் கருகிய நிலையில் பரிதாபமாக உயரிழந்தனர்.
மேலும் பலர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த போது தங்களுடைய  உயிரை துட்சமென நினைத்து மீட்பு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட குரங்கணி, முதுவாக்குடி, கொழுக்குமலை மற்றும் கொட்டக்குடி கிராம இளைஞர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும், தமிழக துணைமுதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் சார்பிலும் தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் நேரில் சந்தித்து நன்றியினை தெரிவித்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார். குரங்கணி பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளிடமும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்களிடம் கேட்டு கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சையதுகான், மாவட்ட துணைசெயலாளர் முருக்கோடை.ராமர், ஒன்றிய செயலாளர் தேனி கணேசன், போடி சற்குணம், பெரியகுளம்; அன்னபிரகாஷ்,  குறிஞ்சி.மணி, சுந்தர்ராஜன், குருமணி, சேஸ், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, நகர பாசறை துணை செயலாளர் நாராயணன்,  கொட்டக்குடி ரவி, மற்றும் போடி ஒன்றிய நிர்வாகிகள், கழக முன்னனி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து