முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் வே.ப.தண்டபாணி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      கடலூர்
Image Unavailable

கடலூர் டவுன்ஹால் அருகில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், கடலூர் பாடலி சிட்டி லயன்ஸ் சங்கம், ஜே.சி.ஐழு கடலூர் விடியல் ஆகியவை இணைந்து நடத்திய உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் வே.ப.தண்டபாணி,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 விழிப்புணர்வு பேரணி

இப்பேரணி கடலூர் டவுன்ஹாலில் தொடங்கி உட்லன்ஸ் ஹோட்டல் வழியாக சென்று அரசு தலைமை மருத்துவமனை சென்றடைகிறது. இவ்விழிப்புணர்வு பேரணியில் அரசு தலைமை மருத்துவமனை பயிற்சி பள்ளி மாணவிகள், செயின்ட் பால் செவிலிய கல்லூரி செவிலியர்கள் என 125 நபர்கள் கலந்து கொண்டு சத்தமின்றி வருவானே! உங்கள் பார்வையை பறிப்பானே, பார்வை திருடனும் அவன் தானே! ஆபத்தானவனும் அவன் தானே, கண்புரை கண்ணில் முற்றிவிட்டால்! கண் நீர் அழுத்தம் கூடிடுமே, சிறியவர் முதல் பெரியவர் வரை! அனைத்து வயதினரையும் பாதித்திடுமே, 40 வயதை கடந்தவரா! உடனே கண் பரிசோதனை செய்திடுங்கள், பக்கப் பார்வையை பறிப்பானே, பரம்பரையாய் தொடர்வானே, பார்வை நரம்பை அறுப்பானே, பக்கப் பார்வையை பறிப்பானே, வயதை கடந்த அனைவரும்!! கண் பரிசோதனை செய்திடனும், கண் நீர் அழுத்தம் இருந்துவிட்டால்! தக்க பரிசோதனை செய்திடனும், விழிப்புணர்வு கொள்வோம்! விழி இரண்டை காப்போம்!! என்ற வாசகங்களை கையில் ஏந்தி கோழமிட்டு பொது மக்களிடையே உலக கண்நீர் அழுத்த நோய்   தொடர்பாக விழிப்புணாவை ஏற்படுத்தினார்கள்.  இப்பேரணியில் துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஹபிசா, மாவட்ட முதன்மை கண் மருத்துவர் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் மரு.அசோக் பாஸ்கர், இந்திய மருத்துவ கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து