25 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் உள்ளது: ஆர்.பி.ஐ-க்கு திருப்பதி தேவஸ்தானம் கடிதம்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      ஆன்மிகம்
tirupati 2017 04 14

திருப்பதி, உண்டியலில் காணிக்கையாக விழுந்த சுமார் 25 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம் ஆர்.பி.ஐ.யின் உதவியை நாடியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் உண்டியல் மற்றும் நிதியுதவி பெட்டிகளில் விழுந்த பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள்தான் இவை. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, திருப்பதி உண்டியலில் பக்தர்களால் போடப்பட்ட காணிக்கை இவை.

ரூ. 25 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புது நோட்டுகளை அளிக்குமாறு கோரி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கோயிலின் தலைமை கணக்குப் பதிவாளரும், கூடுதல் நிதி ஆலோசகருமான பாலாஜி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியிடம் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து இருப்பதாகவும், கோயிலுக்குள்ளேயே அந்த பழைய ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து