முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் சேலம் வருவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வருகின்ற 25.03.2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு விமான நிலைய வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு இன்று (18.03.2018) கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் , மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செ.செம்மலை , ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வெற்றிவேல் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது.

முதல்வர் வருகை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவை துவங்கப்படவுள்ளது. இப்பயணிகள் விமான சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 25.03.2018 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்கள். இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் இன்று நேரில்ஆய்வு செய்யப்பட்டது. இந்த பயணிகள் விமான சேவையானது ட்ரூஜெட் மூலமாக வருகின்ற 25.03.2018 முதல் துவங்குகிறது. தோராயமாக நாள்தோறும் சென்னையிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு சேலம் வந்தடையவுள்ளதாகவும், அதேபோல் சேலத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்றடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் (ருனுஹசூ ) திட்டத்தின் படி மூன்றாண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.1499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பணயிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பயணிகள் விமான சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடவடிக்கை

 

இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுமார் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலும் அரசு நிலங்கள் இருக்கின்றன. மேலும், தனியார்நிலங்கள்கையகப்படுத்தும் போது அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். தற்போது விரிவாக்கப்பணிக்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் பொதுமக்கள் விவசாய பெருங்குடி மக்களை கலந்தாலோசித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் விமான நிலைய அலுவலர் சித்தானந்தன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் இராமதுரைமுருகன், ஓமலூர் வட்டாட்சியர் அறிவுடை நம்பி, ட்ரூஜெட் வணிக அலுவலர் செந்தில் ராஜா, மேலாளர் பிரசன்ன குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து