தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

புதன்கிழமை, 28 மார்ச் 2018      தேனி
ops news 26 3 18

தேனி- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம்   தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்; அமைக்கப்பட்டிருந்த அம்மா வழியில் நல்லாட்சி – அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி குறித்த தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் அம்மா வழியில் நல்லாட்சி – அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி குறித்த தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் வளர்ச்சித்திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்டத்தில் நடைபெற்ற அரசின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை ஒருங்கிணைத்து பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்வதற்காக தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியினை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு கண்டுகளித்தனர். பொதுமக்கள்; தெரிவிக்கையில், இக்கண்காட்சி  செய்தி மக்கள் தொடர்புத்துறையின்  சார்பில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எளிதான முறையில் அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது எனத்தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வீ.பாஸ்கரன்   மாவட்ட வருவாய் அலுவலர்  ச.கந்தசாமி   கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.கே.ஜக்கையன் அவர்கள,; மகளிர் திட்ட அலுவலர்  கல்யாணசுந்தரம்   மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  தி வசந்தி   நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பெரிறயாளர்  முருகேசன்    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  சேதுராமன்   உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  தி.அபிதாஹனீப்   மாவட்ட சமூக நல அலுவலர்    உமையாள்   தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் (பொ)  ராஜாராம்   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.பி.எம்.சையதுகான்  உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து