முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் வட்டம் கீழகாவதுக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபா கூட்டம் : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் பங்கேற்பு

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் வட்டம் கீழகாவதுக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் கலந்து கொண்டார்.

கிராமசபை கூட்டம்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது…. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து சுகாதார முறையில் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு ஊராட்சியிலும் சுகாதார தூதுவர்கள் நியமிக்கப்பட்டு கழிவறை இல்லாத வீடுகள் கணக்கெடுத்து கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ந்த ஊராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போம் என்ற முறையில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிமுடிக்கபப்பட்டு வருகின்றன.கழிவறை கட்டாமல் பொது இடங்களில் மலம் கழிப்பதால் பொதுமக்களுக்கு கூச்சங்கள், வி~பூச்சிக்களுக்கு பயந்தோ, மலம் கழிப்பதை தள்ளிப்போடும் போது உடல் உபாதைகள் ஏற்பட்டு பல்வேறு வகையான நோய்கள் மனித உடலில் ஏற்படுவதற்க்கு வாய்ப்புகளாக அமைகின்றது. ஆகையால் நமது வீடுகள் தோறும் கழிப்பறை கட்டபடுவதால் மலம் கழித்தல் தள்ளிப்போடாமல் உரிய நேரத்திற்க்கு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கிறது.

மேலும் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நமது மாவட்டத்தில் கழிவறை இல்லாத வீடுகளே இருக்க கூடாது எனவும்; திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்போhம் என சபதம் ஏற்போம் என்று மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்;ச்சி திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி , இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.செந்தில் குமார், துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.செந்தில் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜன்பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உ~hராணி, பாஸ்கரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து