கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதிகளில் புதிய திட்டப்பணிகள்:அமைச்சர்கள் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      தூத்துக்குடி

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர், கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி மற்றும் கயத்தார் ஆகிய இடங்களில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்கள்.விழா பேரூரையில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன்; தெரிவித்ததாவது:

புதிய திட்டப்பணிகள் துவக்கம்

மறைந்தாலும், மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்  அம்மா அவர்களின் அரசு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  அம்மா  கிராமபுறத்தில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும்; என்ற உயர்ந்த நோக்கத்தோடு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கினார்கள்.  அம்மா  விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து, தமிழக மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை,  தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவித்து, துரிதமாக செயல்படுத்திவருகிறார்கள். குறிப்பாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பெரியசாமிபுரம் கால்நடை கிளை நிலையத்தில் கால்நடைகளுக்கு 6 விதமான தரம் உயர்த்தப்பட்ட ஊசிகள் போடப்படும். மேலும், கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் 3 தினங்களுக்கு இலவசமாக மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறுவார்கள் மேலும், தமிழகத்தில் 800 கால்நடை மருத்துவர்கள் முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். கால்நடை உதவியாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புகழ் பெற்ற காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட பார் ஆடுகள், கோழிகள் இனப்பெருக்கத்துக்கு 7 இடங்களில் மருத்துவ ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.  இதற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10 கோடி விதம் ரூ.70 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாவட்டத்திற்கும் கால்நடை துறைக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை கால முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் ஏற்கனவே கோமாரி நோய் தடுப்பதற்கான தடுப்பூசி முகாம்  மருத்துவ நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள். விழா சிறப்புரையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ  பேசியதாவது:

அம்மா  கடைகோடியில் உள்ள பொது மக்களும்,அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்று பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். குறிப்பாக பொது மக்களின் அடிப்படை வசதியான சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கிடு செய்து அதன் மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுத்தினார்கள்.  அம்மா அவர்களின் நல்லாசியுடன்,  தமிழ்நாடு முதலமைச்சர்  முதலமைச்சராக பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு பெற்றது. இந்த ஒராண்டில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஓவ்வொரு துறையின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களின் 40 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், சுமார் ரூ.86 கோடி மதிப்பிட்டில், குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால், பொது மக்களுக்கு வரபிரசாதமாக துவக்கி வைக்க உள்ளார்கள். கோவில்பட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், எட்டையபுரம் இருவழிச்சாலை, இரயில்வே சாலை, புதூர் சாலை, ஆர்த்தி திருமணமண்டபம் சாலை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.31 இலட்சம் செலவில் கால்நடை மருந்தகம் அமைக்கப்பட உள்ளது. இத்தகைய திட்டங்களை நீங்கள் பயன்படுத்தி, அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்  கூறினார்கள். இவ்விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கலெக்டர் வெங்கடேஷ், கோவில்பட்டி கோட்டாட்சிதலைவர் அனிதா, மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வட்டாட்சியர் ஜான்தேவசகாயம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சித. செல்லப்பாண்டியன், நகராட்சி ஆணையாளர் அட்சயா, கோவில்பட்டி டிஎஸ்பி. ஜெபராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கோவில்பட்டி அதிமுக பெருநகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், பாண்டவ்hமங்கலம் தொட்கக கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், மாவட்ட விவசாயஅணி செயலாளர். இராமச்சந்திரன், துறையூர் கணேசப்பாண்டியன், வண்டாம் கருப்பசாமி, அம்பிகாவேல்மணி, செண்பகமூர்த்தி, ஜெமினி என்ற அருணாசலசாமி, எம்ஜீஆர் இளைஞரணி செயலாளர் சௌந்தராஜன், அல்லிதுரை, கம்மாபட்டி கிளை செயலாளர் செல்லச்சாமி, அண்ணா தொழிற்சங்கம் டிரைவர் விஜயன், செல்லையா, ஆபிரகாம்அய்யாத்துரை, மாணவரணி செயலாளர் போடுசாமி இளைஞர் பாசறை பழனிகுமார், வானரமூட்டி கூட்டுறவு இயக்குனர் அலங்கபாரபாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் இரமேஷ், இருளப்பன், மாணவரணி போடுசாமி, தலைமை கழக பேச்சாளர் மத. மூர்த்தி, உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து