காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை அதிமுக தொடர்ந்து போராடும் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ பேட்டி

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      தூத்துக்குடி
The AIADMK will continue to fight till the Cauvery management board is in charge  Interview with Raju

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டம்

இதில், அமைச்சர்  கடம்பூர் செ. ராஜூ, மாவட்ட செயலளார் சி.த. செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்ளாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் மோகன், செல்லதுரை, மார்க்கண்டேயன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை, முன்னாள் மாவட்ட செயலளார்கள் ஆறுமுக நயினார், தாமோதரன், அமிர்தகணேசன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,பேரூர் செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உண்ணாவிரத பந்தலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கூறுகையில், காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கும் வரை அதிமுக தொடர்ந்து போராடும். திமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 ஏக்கர் இடம் வழங்கியது. அதன் பிறகு ஆலையில் மாசு வெளியேறி சமயத்தில் 2013 ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவிட்டது அதிமுக ஆட்சியில் தான். தற்போது ஆலையினால் பாதிக்கப்படுவதாக அருகில் உள்ள பொதுமக்கள் அளித்துள்ள குற்றச்சாட்டின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து