மங்கலதேவி கண்ணகி கோயில் சி த்திரை முழு நிலவு விழா

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      தேனி
kannaki fest 6 4 18

   தேனி -தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (30.04.2018) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில்  தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ், தலைமையில் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜி.ஆர்.கோகுல்,   முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருவதனையொட்டி, இவ்வாண்டும் 30.04.2018 அன்று திருவிழா நடைபெறுவதையொட்டி, திருவிழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
  மேலும், காவல்துறையினர் கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆண், பெண் காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உரிய பாதுகாப்பு வழங்குவது, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சார்ந்த வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பக்கதர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை மூலம்  முதலுதவி (யுஅடிரடயnஉந) வாகனம், தீயணைப்பு மீட்பு வாகனத்தினை தயார் நிலையில் நிறுத்தி வைப்பது, இருமாநில வனத்துறையினர் வன விலங்குகளால் பொது மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைப்பது, பக்தர்கள் குறைந்தபட்சம் 5 லிட்டர் குடிநீர் குவளை பயன்படுத்திடவும், காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்குவது, பக்தர்கள் பயன்படுத்திய பொருட்களை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணியில் போதிய பணியாளர்களை ஈடுபடுத்துவது குறித்து இரு மாநில அலுவலர்களுடன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   தலைமையில் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  .ஜி.ஆர்.கோகுல்,  முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
 இக்கூட்டத்திற்குபின் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மங்கலதேவி கண்ணகி கோவிலின் விழா கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்களுடனும், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மங்கலதேவி கண்ணகி கோயில் விழா சிறப்பாக நடைபெற அனைத்து அடிப்படை வசதிகள் செய்துதரப்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் கண்ணகி கோவில் செல்லுவதற்கு 28.04.2018 மற்றும் 29.04.2018 ஆகிய இரு தினங்களில் வாகன தரச்சான்றிழ் வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அனைத்து பக்தர்களும் வழிபாடு செய்திட ஏதுவாகவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்திற்கு வழிக்காட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  .வீ.பாஸ்கரன்   மங்கள தேவி கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து