208 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தேனி கலெக்டர் .பல்லவி பல்தேவ், வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      தேனி
laptop news 9 4 18

 தேனி, -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 208 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  பல்லவி பல்தேவ்,   வழங்கினார்.
 விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசும் போது தெரிவிக்கையில்,
 தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 
தமிழக மாணவ, மாணவியர்கள் எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்பது தடைபடக்கூடாது என்பதற்காக கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை, விலையில்;லா பாட புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை, விலையில்லா பேருந்து பயணஅட்டைகளை வழங்கி வருகிறது. தமிழக மாணவ, மாணவியர்கள் உயர் கல்வி கற்பதற்காக நீட் தேர்வு, அரசுப்பணிகளில் சேர்வதற்கு நடத்தப்படுகின்ற இந்திய குடிமைப்பணித் தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்   பணியாளர் தேர்வாணையம்   வங்கிப்பணியாளர்கள் தேர்வாணையம்  , ஆசிரியர்கள் தேர்வாணையம்  மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்   தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் இதுபோன்று பல்வேறு அரசுப்பணியாளர் தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்
 தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்; எளிய குடும்ப சூழ்நிலையில் பிறந்து தமிழ் வழிக்கல்வியை பயின்றவர்கள் அதிக அளவில் இந்திய குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதுவே கல்வித்துறையில் இந்தியா அளவில் தமிழகம் முதன்மை மாநிலம் என்பதற்கு சான்றாகும். தமிழக அரசால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்துவது மாணவ, மாணவியர்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே ஆகும். மாணவ, மாணவியர்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களை கொண்டு நல்ல முறையில் கல்வி பயின்று தங்களது குடும்பத்திற்கும், மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்தார்.
 இவ்விழாவில், தேனி பாரளுமன்ற உறுப்பினர்  .ஆர்.பார்த்திபன்  கம்பம் சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.டி.கே.ஜக்கையன்  ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து