பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      விளையாட்டு
Ramnath Govind 2017 8 20 0

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 12 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பதாவது:-

ஆண்களுக்கான 50 மீ பிஸ்டல் போட்டியில் ஒம் மிதர்வால் வெண்கலம் வென்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். நமது துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் நம்மை பெருமை அடைய செய்கின்றனர். காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங்கிற்கு வாழ்த்துக்கள். உங்களால் நாடு பெருமை அடைந்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிராப் போட்டியில் வெண்கலம் வென்ற அங்கூர் மிட்டலுக்கு வாழ்த்துக்கள்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து