முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரியில் படகு குழாம்: கவர்னர் கிரன்பேடி. அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      புதுச்சேரி

கிருமாம்பாக்கம் ஏரியை சுற்றுலா தளமாக்கி படகு குழாம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரன்பேடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பேரில் கவர்னர் கிரன்பேடி கிருமாம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்து சுற்றுலா தளமாக நடவடிக்கை எடுத்தார்.

படகு குழாம்

முதல் கட்டமாக ஏரிக்கரையை பலப்டுத்தி நடைபாதை அமைக்க அமைச்சர் கந்தசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தற்போது ஏரி முழுவதம் சுத்தம் செய்யப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படகு குழாமுக்காக ஏரியின் மதகு பகுதியில் சிறிய அளவில் இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா துறை மூலம் முதல் கட்டமாக படகு குழாமில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய 5 படகுகள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து படகு குழாம் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. கவர்னர் கிரன்பேடி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் படகு கழாமை தொடங்கி வைத்தனர். மேலும்  படகில் அமர்ந்து ஏரியில் சவாரியும் செய்தனர். இதையடுத்து கவர்னர் கிரன்பேடி ஏரி முழுவதும் சென்று பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம்,  மேலும் ஏரியை மேம்படுத்தி சுற்றலா பயணிகளை அதிக அளவு கவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து கவர்னர் கிரன்பேடி அங்குள்ள பொது மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது பொது மக்கள், தற்போது தொடங்கப்பட்டுள்ள படகு குழாமில் ஏற்கனவே அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வேலை இழந்Nhதாருக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரினர். அதற்கு கவர்னர் அரசிடம் அதற்கான நிதி இல்லை எனினும், இங்குள்ன பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் படகு குழாம் பகுதியில் சிறு கடைகள் மற்றும் சிறு தொழில்கள் செய்ய கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து