எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோடைக்காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்க அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் உத்தரவின் பேரில் வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் ஆர்.கே.நகர் பகுதியில் நேற்று 7 இடங்களில் கோடைக்கால குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.
குடிநீர் பந்தல்
மாவட்ட கழக பிரதிநிதி ஜெ.எம்.நரசிம்மன் ஏற்பாட்டில் ஆர்.கே.நகர் பகுதியல் அடங்கிய ஏ.இ.கோயில்தெரு புதுவண்ணை மார்கெட் காசிமேடு மீன்பிடி துறைமுகம், பூண்டிதங்கம்மாள்தெரு, முருகன்கோயில், சத்தியமூர்த்திதெரு, பீச்ரோடு மார்க்கெட்தெரு, நம்மையாமேஸ்திரி ஆகிய பகுதிகளில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு நீர்மோர், பழவகைகள், வெள்ளரி, இளநீர் மற்றம் பழச்சாறுகளை மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் ஆர்.எஸ்.ஜனார்த்தனம், ஏ.கணேசன், டேவிட்ஞானசேகரன், எஸ்.எம்.முருகன், டி.கே.சுபாஷ், ஆட்டோதேவராஜ், கே.மகேந்திரன், சிவக்குமார், சுஜாதாமதனகோபால், டைகர்தயாநிதி, சசிகுமார், குமரேசன், கே.பி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கே.பி.விஜி நன்றி கூறினார். திருவொற்றியூர் பகுதியில் 14வது வட்டம் சுங்கச்சாவடி பேருந்துநிலையத்தில் வட்ட கழக பொருளாளர் என்.தீனன் தலைமையில் அம்மா பூங்கா அமைப்பாளர் டி.கார்த்திக், எஸ்.டேவிட், பந்தல்பாண்டி ஆகியோர் முன்னிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி மா.ராசு, குடிநீர் பந்தலை திறந்து வைத்து அங்குள்ள பொதுமக்களுக்கு நீர்மோர், பழவகைகள், வெள்ளரி, இளநீர் மற்றம் பழச்சாறுகளை வழங்கினார். முன்னதாக மாவட்ட கழக முன்னாள் பொருளாளர் ஆர்.பத்மநாபன் நூறு பேருக்கு பிளாஸ்டிக்குடங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.டி.எஸ்.இன்பநாதன், டி.மணிமாறன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் டி.செபஸ்டீன், எம்.திருஞானம், ஆர்.தேசிங்கு, டி.கதிரவன், ஆட்டோ சீனிவாசன், பீர்கான்பாய், காந்தி, டி.அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |