இனி வெளிநாடுகளில் 'யெஸ் வங்கி'

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      வர்த்தகம்
yes bank

தனியார் வங்கியான யெஸ் வங்கி வெளிநாடுகளில் கிளை தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருக்கிறது. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் தொழில் மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கு உதவ இந்த கிளைகள் தொடங்கப்படுகிறது என வங்கியின் நிர்வாக இயக்குநர் ராணா கபூர் தெரிவித்தார்.

யெஸ் வங்கி வெளிநாடுகளில் கிளை தொடங்குகிறது. ஏற்கெனவே அபுதாபியில் அலுவலகம் இருக்கிறது. தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களுடன் இந்த இரு கிளைகளும் தொடங்கப்பட இருப்பதால் சர்வதேச நிதி சூழலில் யெஸ் வங்கி முக்கிய பங்காற்றும். சர்வதேச அளவில் முக்கியமான நிதி மையங்களுடன் தொடர்புகொள்ள முடியும். இதன் மூலம் சர்வதேச வங்கிப்பிரிவில் யெஸ் வங்கி முக்கிய பங்காற்றும் என்றும் ராணா கபூர் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து