முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் கவுமாரியம்மன் கோவில் சித்திரை திரு விழா.பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.

புதன்கிழமை, 2 மே 2018      தேனி
Image Unavailable

கம்பம்,- கம்பம் கவுமாரி அம்மன் கோவில் சித்திரை திரு விழாவை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் அக்னி சட்டி,ஆயிரங்கண்பானை எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ளது பிரசித்தி பெற்ற  அருள் மிகு கவுமாரி அம்மன்  கோவில் இக் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இதன்படி இந்த ஆண்டு சித்திரை திரு விழா கடந்த ஏப்ரல் 17ம் தேதி பூசாட்டுதல் மற்றும் 18ம் தேதி கொடியேற்றம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 21 நாட்கள் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி வரும் மே 8 ம்தேதி வரை சித்திரை திரு விழா நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது.கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய திரு விழாவான அக்னிசட்டி திருவிழா நேற்று செவ்வாய்கிழமை முதல் துவங்கியது.கடந்த இரண்டு நாட்களாகவே கம்பம் உத்தமபுரம் மந்தையம்மன் கோவில் தெரு,ஜல்லிக்கட்டுத் தெரு,தாத்தப்பன்குளம்,காமயகவுண்டன் பட்டி ரோடு,சுருளிப்பட்டி ரோடு,மணி நகரம்,ஆங்கூர்பாளையம் ரோடு,பாரதியார் நகர்,நாட்டுக்கல், கஞ்சையன்குளம்,நாட்டுக்கல் உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் ஓலி பெருக்கி அமைத்து மா,வேப்பிலை,தோரணங்கள்,அலங்கராம்,மின் விளக்கு அமைத்து இருந்தனர்.இன்று அதிகாலையில் இருந்தே கம்பம் நகரம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்தும் ஆண்,பெண் பக்தர்கள் அக்னிசட்டி,ஆயிரங்கண் பானைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.பின்னர் மாரி அம்மன் கோவிலை வலம் வந்து அக்னி சட்டிகளையும் ஆயிரங்கண் பானைகளையும் இறக்கி வைத்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள்.கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும்,ஆடு மற்றும் கோழிகளை அறுத்து பலி கொடுத்தும் நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் தக்கார் பாலகிருஷ்ணன்,செயல் அலுவலர் செந்தில் குமார் மற்றும் கிராம உறுப்பினர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து