முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி-அல்லிநகரம் நகராட்சி உட்பட்ட காமாராஜர் பேருந்து நிலையத்தினை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு

வியாழக்கிழமை, 3 மே 2018      தேனி
Image Unavailable

 தேனி,-தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி உட்பட்ட காமாராஜர் பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
       ஆய்வின்போது பேருந்து நிலையத்திற்க்குள் வரும் மற்றும் வெளியேறும் வழித்தடங்களையும், பூ சந்தை, வாகனங்கள் நிறுத்துமிடம், அம்மா உணவகம், ஆட்டோக்கள் நிறுத்துமிடம், சிற்றுந்து நிறுத்துமிடம், பழக்கடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
     ஆய்வுக்குபின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் இயக்கத்தை முறைப்படுத்தி பயணிகளை ஏற்றிசெல்லவும், பேருந்து நிலையத்தில் அனுமதியில்லாமல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பாதுகாப்பான பயணத்தை உருவாக்கிடவும், அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அப்புறபடுத்திடவும், பேருந்து நிலையத்தினை சுத்தமாக பராமரித்து, சுகாதாரத்தினை பேணிக்காத்திடவும், மழைநீர் தேங்காத வண்ணம் உடனுக்குடன் மழைநீர் வெளியேற்றிட கழிவுநீர் வாய்க்கால்களை முறையாக பராமரித்திட வேண்டுமென்றும், சாலைகளில் உள்ள மின்விளக்குகள், போக்குவரத்து சமிக்கை கம்பங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்திடவும், நடைபாதைகளில் பொதுமக்கள் நடந்துசெல்வதற்கு ஏதுவாக முறையாக பராமரித்திடவும், சிசிடிவி கேமிராக்களை பராமரித்து கண்காணித்திடவும், அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் உணவுகள், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவை மாறாமல் வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்   ச.கந்தசாமி அவர்கள், தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர்   ராஜாராம் அவர்கள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்  .செல்வக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து