வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது தேனி கலெக்டர் தகவல்

திங்கட்கிழமை, 7 மே 2018      தேனி
theni collecter 7 5 18

தேனி, - தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா 08.05.2018 முதல் 15.05.2018 வரை (தேரோட்டம் 11.05.2015 அன்று) சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை   மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,   பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வின் போது, தேனி மற்றும் சின்னமனூh பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிக கழிவறை, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஆற்றிலிருந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்து செல்லும் பகுதி, பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி, தேர் செல்லும் பாதை, தீச்சட்டி செலுத்துமிடம், கண்காணிப்பு கோபுரம், சிசிடிவி நிறுவப்பட்டுள்ள இடங்கள், காவல்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் திருகோவிலில் சித்திரைத் திருவிழா மே 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பேருந்துகளில் வந்துசெல்ல ஏதுவாக தேனி மற்றும் சின்னமனூரிலிருந்து வரும் வாகனங்களுக்கு தனித்தனி பேருந்து நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிட வசதிகள், 8 இடங்களில் தற்காலிக குடிநீர்த்தொட்டி அமைக்கப்பட்டும், தேவையான இடங்களில் குழாய்கள் மூலமாகவும் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆற்றிலிருந்து தண்ணீர் மற்றும் தீச்சட்டி எடுத்துச்செல்லும் பக்தர்களின் வசதிக்காக தனி வழியும் செலுத்துமிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் தினமும் உணவகங்களில் தரப்பரிசோதனை செய்த்pடவும், கோவிலுக்குள் 25ம், பிறப்பகுதிகளில் 25ம் என மொத்தம் 50 சிசிடிவி கேமிராகள் மூலமும், தேவையான இடங்களில் சுழல் கேமிரா மூலம் கூட்டத்தினை கண்காணித்திடவும,; ஆற்றங்கரை பகுதி, பேருந்து நிறுத்தும் இடங்களில் உயர்கோபுரங்கள் வழியாக கண்காணித்திடவும், தேவையான அளவு பாதுகாப்புக்காக காவலர்களும், 24 மணி நேரமும் பணிபுரியும் வண்ணம் மருத்துவக்குழுக்களும,; 108 ஆம்புலன்ஸ் வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீச்சட்டி செலுத்துமிடத்தில் தீத்தடுப்பு வாகனம், 1 ஜேசிபி வாகனம், 4 டிராக்டர், 1 பொக்லைன் இயந்திரங்கள் பணியில் பயன்படுத்தபடவுள்ளன.
 பொதுமக்களின் வசதிக்காக தேவையான இடங்களில் மின்விளக்குகள், அறிவிப்பு பலகைகள், ஒலிப்பெருக்கிகள் ஏற்படுத்தி தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கவும், கோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு வாக்கிடாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தகவல்கள் எள்pதில் பரிமாரிக்கொள்ள முடியும், பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பான முறையில் வழிபாடு செய்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
 ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர்  .ச.கந்தசாமி   உட்பட பலர் கல்துகொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து