மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம்

திங்கட்கிழமை, 14 மே 2018      வர்த்தகம்
Petrol price1(N)

கர்நாடக தேர்தலையொட்டி கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் நேற்று ஒரேநாளில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 17 காசுகளும், டீசல் மீது லிட்டருக்கு 21 காசுகளும் உயர்த்தியுள்ளன.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததன் காரணமாக அந்த விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தி இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து, ரூ.74.63 காசுகளில் இருந்து ரூ.74.80 காசுகளாக அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.65.93 காசுகளில் இருந்து ரூ.66.14 காசுகளாகஅதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 56 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பாகும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து