கூடுதல் இறக்குமதி வரி விதித்தால் அமெரி்க்க ஒப்பந்தங்கள் ரத்தாகும்: சீனா

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      வர்த்தகம்
China 2018 06 04

பெய்ஜிங், தங்கள் நாட்டுத் தயாரிப்புகள் மீது அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்தால், அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது,

சீனப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் இறக்குமதி வரிகளை அறிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட வர்த்தகப் போர் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில், வாஷிங்டனில் கடந்த வாரம் நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையில், வேளாண்மை, எரிசக்தி போன்ற துறைகளில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டது. எனினும், இது தொடர்பான இறுதி முடிவுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தொடக்கத்திலிருந்தே ஸ்திரமாக உள்ளது. இந்தச் சூழலில், சீனப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி போன்ற பொருளாதார நெருக்கடிகளை அமெரிக்கா அறிவித்தால், இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லாததாகி விடும் என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ரோஸ் தலைமையிலான குழு, சீனாவின் துணை பிரதமர் லியு ஹே தலைமையிலான குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து