முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

50 மைக்ரானுக்கு குறைவாக பயன்படுத்தப்பட்ட 4813 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதன்கிழமை, 6 ஜூன் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் - விருதுநகர் மாவட்டத்தில் உலக சுற்றுசூழுல் தினம் 2018யை முன்னிட்டு இன்று(05.06.18)  பிளாஸ்டிக்  மாசுபாடுகளை முறியடிப்போம்  என்பதை கருப்பொருளாக கொண்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து நடத்திய வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட   பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்;க்கும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் 50 மைக்ரானுக்கு குறைவாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய துணை ஆட்சியர் தலைமையில் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில்,  துணை ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளர் தலைமையில், நகர் நல அலுவலர், வட்டாட்சியர், துப்புரவு ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் அனைத்து நகராட்சிகளுக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டு, அந்ததந்த நகராட்சிகளுக்கு உட்பட்ட  பகுதிகளில் உள்ள வணிக வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் 50 மைக்ரானுக்கு குறைவாக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்கள்;. அவ்வாறு சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.20,000ஃ- அபராத்தொகையாகவும், சிவகாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 3000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.22,000  அபராத்தொகையாகவும், திருத்தங்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 142 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,500 - அபராத்தொகையாகவும், இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 161 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.41,800  அபராத்தொகையாகவும், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 270 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.24,400 - அபராத்தொகையாகவும், அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 90 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.15,400 - அபராத்தொகையாகவும் மற்றும் திருவில்லிப்புத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தபோது 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 1000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.12,000 - அபராத்தொகையாகவும் என மொத்தம் 50 மைக்ரானுக்கு குறைவாக  பயன்படுத்தப்பட்ட 4813 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், ரூ.1,40,200 - அபராத்தொகையாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
 வணிக வர்த்தகம்; மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம்  இனிவருங்காலங்களில்  இது போன்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சிறுதுண்டுகளாக நறுக்கப்பட்டு சாலைஅமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து