முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலையருவி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜூ பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

மதுரை - மதுரை மாவட்டம், புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலையருவி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜூ   கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை  வழங்கி தெரிவித்ததாவது:
   பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில் மென்மேலும் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  மாண்புமிகு அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 14 வகையான உபகரணங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.  தமிழ்நாட்டில் மட்டும் தான் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.  மாணவ, மாணவிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.  மாணவர்கள் கல்வி கற்கும் போதே விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு கொள்ள வேண்டும்.  விளையாடும் நேரத்தில் விளையாட வேண்டும்.  படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும்.  உதவி செய்யும் நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.  ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை செய்ய வேண்டும். 
  தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுப்பயிற்சி, போட்டித்தேர்வுக்கான பயிற்சி போன்ற திட்டத்தினையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  அம்மா அரசு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.  அதன்படி தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் 2017-18ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 77.47 இலட்சம் மாணாக்கர்களும், மதுரை மாவட்டத்தில் 2,10,400 மாணவர்களும் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.  2018-19ம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ.195.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை மாவட்டத்தில் 2018-19ல் 2,83,511 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  நோட்டுப்புத்தகங்கள் 2017-18ஆம் கல்வியாண்டில் 61.60 இலட்சம் மாணாக்கர்களும், மதுரை மாவட்டத்தில் 1,35,626 மாணவர்களும் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.  2018-19ம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ.107.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதுரை மாவட்டத்தில் 2018-19ல் 1,35,145 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  தமிழகத்தில் மடிக்கணினிகள் 2017-18ஆம் கல்வியாண்டில் 5.30 இலட்சம் மாணாக்கர்களும், மதுரை மாவட்டத்தில் 21,411 மாணவர்களும் இத்திட்டத்தினால் பயனடைந்துள்ளனர்.  2018-19ம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ.758.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு இணைச்சீருடைகள் 2017-18ம் கல்வியாண்டில் 41.19 இலட்சம் மாணாக்கர்களும், மதுரை மாவட்டத்தில் 63,113 மாணாக்கர்களும் பயனடைந்துள்ளனர்.  2018-19ம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை தொடர ரூ.414.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  எனவே மாணவ, மாணவர்கள் அனைவரும் தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.மாரிமுத்து  மதுரை மாவட்ட கல்வி அலுவலர்  அமுதா அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து