பிளாஸ்டிக் தடையால் ரூ.15,000 கோடி நஷ்டம்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      வர்த்தகம்
plastic -ban

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரண மாக ரூ.15,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 3 லட்சம் நபர்கள் வேலை இழந்திருப்பதாகவும் பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளார் நீமித் புனமியா தெரிவித்தார். இந்த சங்கத்தில் 2,500 உறுப்பினர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கு தொழிற்சாலையை மூடுவதை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை என்றும் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டது. உற்பத்தி, பயன்படுத்துதல், விற்பனை, விநியோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பாதுகாத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் பை, ஸ்பூன், தட்டு, பாட்டில் மற்றும் தெர்மாகோல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த சனிக்கிழமையுடன் (ஜூன் 23) முடிவுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து