முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் அருகே போலீஸாரல் தோண்டி எடுக்கப்பட்ட வெடி பொருட்களை நீதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு.

புதன்கிழமை, 27 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம்; -:   ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் திங்கள் கிழமை எடுக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்களை நீதிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார் .
  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ளது  மீனவர் எடிசன் என்பவரின் வீடு.இவர் வீட்டில் திங்கள் கிழமை கழிவுதொட்டி அமைக்க குழ் தோண்டும் போது  தமிழக போராளி  அமைப்புகள் பயன்படுத்திய ஆயுத குண்டு குவியல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.இது குறித்து தகவல்கள் அறிந்து அப்பகுதிக்கு வந்ச தங்கச்சிமடம் போலீஸார்கள் இந்த குண்டுகளை கைப்பற்றி பாதி குண்டுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆயுதபடை மைதான கிடங்கிலும்,பாதி குண்டுகளை மீனவர் எடிசன் வீட்டிலும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  மீனவர் வீட்டில் வைத்துள்ள சில குண்டுகளின் செயல் திறன் குறித்து மதுரையில் இருந்து வெடி குண்டு பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிபுனர் குழு வரவழைக்கப்பட்டு நேற்றுக்கு முன்தினம் சோதணை நடத்தினர்.இவர்கள் தோண்டி எடுக்கப்பட்ட வெடி பொருள்களின் தன்மை மற்றும் தற்போதயை அவற்றின் நிலைகுறித்தும் ஆய்வு நடத்தினர். இதன் அறிக்கையை ராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மகேஸ்யிடம் அளித்து சென்றனர். அதில் 20 ராக்ட்லாஞ்சர்,ஜெலட்டின் குச்சி பயண்படுத்த சுடிய காப்பர் வையர் 372 மீட்டர் மொத்தமாக 325 பொருள்கள்  இருந்ததாகவும் இவை அனைத்தும் 1970 ஆம் ஆண்டு தயரிக்கப்பட்டு 1983-86 ஆண்டு பயன்படுத்தபட்டவை,எனவும் என தெரியவந்துள்ளது.இதனையடுத்து இந்த வெடிகுண்டுகளை  ஆய்வு நடத்துவதற்காக நேற்று திருவாடனை நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார்.பின்னர் வெடிபொருட்கள் எடுக்கப்பட்டது மற்றும் அதன் தன்மை குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களிடம் கேட்டறிந்தார் இதனையடுத்து  ராமநாதபுரம் ஆயுதக்கிடங்கிள் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி குண்டுகளை பார்வையிட்டார்.அதன் பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அறிக்கை அளித்தார்.அதன் பின்னர் நீதிபதியின் அறிக்கையை போலீஸார்கள் மதுரை காவல் துறை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டு அவர்கள் விசாரணை நடத்திய பின்  கமிஷனரின் உத்தரவின் படி வெடிகுண்டு நிபுணர் குழுவினர்களை வரவைத்து  பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக இது அழிக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.                                                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து