தேவாரம் பேரூராட்சிப் பகுதிகளில் யானையால் பாதிப்புக்குள்ளான பயிர் வன ப்பகுதிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு

புதன்கிழமை, 4 ஜூலை 2018      தேனி
theni news

தேனி-தேனி மாவட்டம், தேவாரம் பேரூராட்சி பகுதிகளில் ஒற்றை யானையால் எல் பாறையில் பாதிப்புக்குள்ளான பயிர் மற்றும் வன நிலப்பகுதிகளை   நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்குப்பின்னர், பேரூராட்சி அலுவலகத்தில் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  கலந்துரையாடினார்.
     மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவிக்கையில், தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தேவையான இரை இருக்கின்ற போதும், தரைப்பகுதியில் பயிர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை உண்ணும் போது அதன் சுவையின் தன்மை அதனை ஈர்க்கின்ற போது தரைப்பகுதியில் யானை முகாமிட்டு தங்குவதற்கான சூழ்நிலை ஏற்படுகிறது. அவ்வாறு ஒற்றையானை இரை தேடி வனப்பகுதியிலிருந்து தரைப்பகுதியில் வந்து செல்லும் போது அதற்கு இடையூறாக உள்ள பொதுமக்களை தாக்கி பாதிப்புகள் ஏற்படுத்துகிறது. யானையை பயிர் நிலங்களுக்குள் வருவதை தடுத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தி பாதுகாப்பான முறையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வனத்துறையின் மூலம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டாலும் மீண்டும் தரைப்பகுதியில் முகாமிட்டு தங்கி விடுகிறது. இந்த யானையானது தினந்தோறும் 20 முதல் 25 கி.மீ சுற்றளவில் நடந்து செல்கிறது.

யானையை அகழி ஏற்படுத்தி கட்டுப்படுத்திடவும், கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதன் மூலம் யானையின் நடமாட்டத்தினை கண்டறிந்து யானை முகாமிட்டுள்ள பகுதியில் பொதுமக்கள் வராத வண்ணம் பொதுமக்களுக்கு அறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரைப்பகுதியில் யானையின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்திட வனக்குழு மூலம் கடந்த வாரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யானையினை வேறு வனப்பகுதி அல்லது அருகாமையில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது நீண்டகால பணி என்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், உரிய பாதுகாப்பினை வழங்கிடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யானையினை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,   தெரிவித்தார். 
 இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வன அலுவலர்  .கௌதமன்  பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து