முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் புதிய பஸ்கள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் புதிய பஸ்களை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் புதிய பேருந்து  நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்துகளை கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பாக ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 515 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார்.  அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 69 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 35 பேருந்துகள் ஆகும்.  அதில் முதற்கட்டமாக 12 புதிய பேருந்துகளை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்துள்ளார். புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள இப்பேருந்துகளில் ராமநாதபுரம் - மதுரை வழித்தடத்தில் 5 பேருந்துகளும், ராமேஸ்வரம்- மதுரை, ராமநாதபுரம் - குமுளி, ராமநாதபுரம் - கோயம்புத்தூர், ராமேஸ்வரம் - கோயம்புத்தூர், முதுகுளத்தூர் - மதுரை, பரமக்குடி - மதுரை, கமுதி- மதுரை ஆகிய வழித்தடங்களில் தலா 1 பேருந்து வீதம் மொத்தம் 12 பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
 அதனைத் தொடர்ந்து கீழக்கரை பேருந்து நிலையத்தில் ராமநாதபுரம் நகர் போக்குவரத்து துறையின் சார்பில் கீழக்கரை- உத்திரகோசமங்கை வரை இயக்கப்பட்ட தடம் எண் 18-னை இன்று முதல் நல்லாங்குடி, எக்ககுடி வழியாக கொத்தங்குளம் வரை வழித்தட நீட்டிப்பு செய்து துவக்கி வைத்தார். இப்பேருந்தானது தினந்தோறும் காலை, மாலை என இரண்டு வேளையாக இயக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பி.செல்வகோமதி குமார், கோட்ட மேலாளர் வி.சரவணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைவர் பி.ஜெயஜோதி, போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், தெய்வேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து